/

2 ஆப்கன் வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு!

யு19 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டி குறித்து...

News image
சதமடித்த ஆப்கன் வீரர்கள். - படம்: ஆப்கன் கிரிக்கெட் வாரியம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

யு19 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 310/4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளார்கள்.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது.

இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஆப்கன் வீரர் ஃபைசல் ஷினோஜடா அசத்தலாக விளையாடி சதம் அடித்து 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நான்காவது வீரராக களமிறங்கிய உசைருல்லாஹ் நியாசாய் என்ற வீரரும் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யு19 நாக் அவுட் போட்டிகளில் அதிகபட்ச சேஸிங் 245 ரன்களாக இருக்கையில், இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.