/

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அறிமுக சீசன் முதல் தற்போது வரை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணிகள் குறித்து...

News image
ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்திய அணி.- படம் | பிசிசிஐ
Updated On :7 பிப்ரவரி 2026, 7:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் டி20 வடிவிலான போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுக சீசனின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சதம் விளாசியது ரசிகர்களை குதூகலமடையச் செய்தது. அங்கிருந்து டி20 கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் தொடங்கியது என்றே கூறலாம்.

அறிமுக சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை இரண்டு முறை டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரையிலான சாம்பியன்கள் விவரம்

2007 - இந்தியா - பாகிஸ்தான் (எதிரணி)

2009 - பாகிஸ்தான் - இலங்கை (எதிரணி)

2010 - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா (எதிரணி)

2012 - மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை (எதிரணி)

2014 - இலங்கை - இந்தியா (எதிரணி)

2016 - மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து (எதிரணி)

2021 - ஆஸ்திரேலியா - நியூசிலாந்து (எதிரணி)

2022 - இங்கிலாந்து - பாகிஸ்தான் (எதிரணி)

2024 - இந்தியா - தென்னாப்பிரிக்கா (எதிரணி)

summary

Regarding the teams that have won the championship title in the ICC T20 World Cup tournament, from the inaugural season to the present...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.