டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கவில்லை!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டிக்கு டாஸ் சுண்டப்பட்டபோது, இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

News image
- படம் | AP
Updated On :15 பிப்ரவரி 2026, 2:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டிக்கு டாஸ் சுண்டப்பட்டபோது, இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி சில நாள்களுக்கு முன்பு இருந்தது. பின்னர், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி நடைபெறுவது உறுதியானது.

இருப்பினும், இரண்டு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 14) பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கை குலுக்குவது டாஸ் சுண்டும்போது தெரிய வரும் காத்திருங்கள் என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், டாஸின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

summary

When the toss was thrown for today's match in the T20 World Cup, the captains of India and Pakistan did not shake hands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.