ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி வாய்ப்பில் மார்னஸ் லபுஷேன்..! கம்பேக் அளிப்பாரா?

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு குறித்து...

Marnus Labuschagne of Australia walks off after he was dismissed by Bangladesh's Ebadot Hossain their cricket test match in Darwin, Australia, Thursday, Aug. 13, 2026. (James Ross/AAP Image via AP)

ஆட்டமிழந்து வெளியேறும் மார்னஸ் லபுஷேன். - படம்: ஏபி

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:06 pm IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் மார்னஸ் லபுஷேனுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி கண்டது.

சொந்த மண்ணில் தோல்வியுற்றதால் ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. தொடக்க வீரர் ஜேக் வெதரலார்டு நீக்கப்பட்டு மாட் ரென்ஷா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, சுமாராக விளையாடிவரும் மார்னஸ் லபுஷேன் நீக்கப்படுவாரென பலரும் எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அவரை நீக்காமல் அணியில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்தார்.

ஸ்டீவ் ஸ்மித்திற்குப் பதிலாக கன்கஷன் சப்ஸ்ட்யூட்டாக விளையாட வந்தவர் நிரந்தரமான நம்.3 வீரராக கடந்த ஒன்பதாண்டுகளாக விளையாடி வருகிறார்.

இதுவரை, மார்னஸ் லபுஷேன் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,726 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.17ஆக இருக்கிறது. இதில் 2 இரட்டைச் சதங்கள், 11 சதங்கள், 25 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக ஜூலை, 2023ல் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் வரும் ஆக.22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சரியாக விளையாடாவிட்டால் அவர் அடுத்த தொடரில் இருந்து நீக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பேக் அளிப்பாரா அல்லது அணியில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Summary

Marnus Labuschagne last chance in Test Cricket for Cricket Australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.