ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

Ravindra Jadeja delighted after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவீந்திர ஜடேஜா - படம் | பிசிசிஐ

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:26 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மானவ் சுதர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Summary

Indian all-rounder Ravindra Jadeja has set a new record in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.