ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது சுதந்திரம் அளித்தது: ஹென்ரிச் கிளாசன்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது தனக்கு சுதந்திரம் அளித்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார்.

Heinrich Klaasen (File photo)

ஹென்ரிச் கிளாசன் (கோப்புப் படம்)

Published On :16 ஆகஸ்ட் 2026, 7:54 pm IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது தனக்கு சுதந்திரம் அளித்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஹென்ரிச் கிளாசன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஐபிஎல் மற்றும் உலகின் பிற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது தனக்கு தேவையான சுதந்திரத்தை அளித்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொண்டு உலகெங்கிலும் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடுவதற்கான சுதந்திரத்தை எனக்கு கொடுத்துள்ளது. ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இடையே எனக்கு ஒன்றிரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கிறது. அந்த இடைவெளி என்னைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

கோப்பைகளை வெல்வதுதான் என்னுடைய ஒரே இலக்கு. நான் மிகவும் குறைவான அளவே கிரிக்கெட் விளையாடுகிறேன். அதனால், தரமான கிரிக்கெட்டினை விளையாட வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடர் எனக்கு நன்றாக அமைந்தது. தி ஹண்ட்ரட் தொடரிலும் எனக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது என்றார்.

தி ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஹென்ரிச் கிளாசன் விளையாடி வருகிறார். நடப்பு ஹண்ட்ரட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 166 ரன்கள் எடுத்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெறும் தி ஹண்ட்ரட் தொடரின் இறுதிப்போட்டியில் டிரண்ட் ராக்கெட்ஸ் மற்றும் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Former South African player Heinrich Klaasen has stated that retiring from international cricket gave him a sense of freedom.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.