ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (36 வயது) அபாரமாக பந்துவீசி நடப்பு ஐபிஎல் தொடரில் பர்பிள் கேப்பை வென்றுள்ளார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 6.3 ஓவர்களில் 77/1 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த அதியற்புதமான பந்துவீச்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து புவனேஷ்வர் குமார் அசத்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அன்ஷுல் கம்போஜ் உடன் சமன்செய்துள்ளார். ஆனால், குறைவான ரன் ரேட், சராசரி உள்ளதால் முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை புவனேஷ்வர் குமார் சமீபத்தில் நிகழ்த்தியிருந்தார். தற்போது, பர்பிள் கேப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
பர்பிள் கேப் பட்டியலில் இருப்பவர்கள்
1. புவனேஷ்வர் குமார் - 14 விக்கெட்டுகள் (16.86 சராசரி)
2. அன்ஷுல் கம்போஜ் - 14 விக்கெட்டுகள் (16.93 சராசரி)
3. இஷான் மலிங்கா - 14 விக்கெட்டுகள் (18.21 சராசரி)
4. ஜோஃப்ரா ஆர்ச்சர் - 13 விக்கெட்டுகள் (17.92 சராசரி)
5. பிரின்ஸ் யாதவ் - 13 விக்கெட்டுகள் (18.62 சராசரி)
Summary
Bhuvneshwar Kumar Wins the Purple Cap! Why Was He Not Given the Man of the Match Award?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!

15 வயதான சூர்யவன்ஷி மிகவும் பக்குவமாக விளையாடுகிறார்: புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!

ஐபிஎல் 2008 - 2025 பர்பிள் கேப் வெற்றியாளர்கள்: ப்ராவோ, புவனேஷ்வர் ஆதிக்கம்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


