ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு ஒவ்வொரு சீசன் இறுதியிலும் பர்பிள் கேப் விருது வழங்கப்படுகிறது. 2008 முதல் ஐபிஎல் போட்டிகளும் இந்த விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய பாகிஸ்தானின் சோஹைல் தன்வீர் 22 விக்கெட்டுகள் எடுத்து இந்த பர்பிள் கேப் விருது வென்றார்.
சோஹைல் தன்வீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் 14 ரன்கள் கொடுத்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஜாரி ஜோசப் 2019ல் 6 விக்கெட்டுகளுக்கு 12 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ 32 விக்கெட்டுகள் எடுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவராக இருக்கிறார். இவருடன் ஹர்ஷல் படேல் 2021ல் சமன்செய்தார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே டிவைன் ப்ராவோ, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் 2 முறை இந்த விருதை வென்று அசத்தியுள்ளார்கள். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தராக யுஸ்வேந்திர சஹால் முதலிடத்தில் இருக்கிறார்.
2008: சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகள்
2009: ஆர்பி சிங் (தில்லி) - 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்
2010: ப்ரக்யான் ஓஜா (தில்லி) - 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்
2011: லாசித் மலிங்கா (மும்பை) - 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகள்
2012: மோர்னே மோர்கல் (தில்லி) - 16 போட்டிகளில் 25 விக்கெட்டுகள்
2013: டிவைன் ப்ராவோ (சிஎஸ்கே) - 18 போட்டிகளில் 32 விக்கெட்டுகள்
2014: மோஹித் சர்மா (சிஎஸ்கே) - 16 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்
2015: டிவைன் ப்ராவோ (சிஎஸ்கே) - 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகள்
2016: புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ்) - 17 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்
2017: புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ்) - 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகள்
2018: ஆண்ட்ரூ டை (பஞ்சாப்) 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள்
2019: இம்ரான் தாஹிர் (சிஎஸ்கே) - 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகள்
2020: ககிசோ ரபாரா (தில்லி) - 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகள்
2021: ஹர்ஷல் படேல் (ஆர்சிபி) - 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகள்
2022: யுஸ்வேந்திர சஹால் (ராஜஸ்தான்) - 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்
2023: முகமது ஷமி (குஜராத்) - 17 போட்டிகளில் 28 விக்கெட்டுகள்
2024: ஹர்ஷல் படேல் (பஞ்சாப்) - 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள்
2025: பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகள்
Summary
IPL Purple Cap winners: Dwayne Bravo and Bhuvneshwar Kumar lead honours list.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!

15 வயதான சூர்யவன்ஷி மிகவும் பக்குவமாக விளையாடுகிறார்: புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!

ஐபிஎல் 2008 - 2025 ஆரஞ்ச் கேப் வெற்றியாளர்கள்..! வார்னர், கெயில், கோலி ஆதிக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



