மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ்! யார் முதலிடம்?

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ் இணைந்தது பற்றி...

News image

ருதுராஜ் கெய்க்வாட் - ANI

Updated On :27 ஏப்ரல் 2026, 7:34 am

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து, இந்த சீசனின் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

சென்னை அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

மகேந்திர சிங் தோனி - 234

சுரேஷ் ரெய்னா - 180

ஷிவம் துபே - 106

ருதுராஜ் கெய்க்வாட் - 101

கடந்த 2020 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், 2021 சீசனில் 635 ரன்களும், 2023 சீசனில் 590 ரன்களும், 2024 சீசனில் 583 ரன்களும் குவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்ட நிலையில், 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

தற்போது மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ள ருதுராஜ், 8 போட்டிகளில் 178 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மோசமான ஸ்ட்ரைக் ரேட்டை (121.09) பதிவு செய்துள்ளார்.

Summary

Ruturaj Features on the List of Players with the Most Sixes for CSK! Who Holds the Top Spot?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.