மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :14 ஏப்ரல் 2026, 12:34 pm

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (ஏப்ரல் 14) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவிட்டபோதிலும், அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.

இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்கள், 28 ரன்கள், 7 ரன்கள் மற்றும் 15 ரன்கள் முறையே எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ருதுராஜ் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதால், சிஎஸ்கேவால் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை.

முதல் நான்கு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாப் ஆர்டரில் ருதுராக் கெய்க்வாட் ரன்கள் குவிக்காமலேயே சிஎஸ்கே அணியால் 200 ரன்களை எளிதில் கடக்க முடிகிறது. அவரும் ஃபார்முக்குத் திரும்பினால், அணியின் பேட்டிங் மேலும் வலுவாகிவிடும்.

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்குத் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

Expectations have arisen as to whether Chennai Super Kings captain Ruturaj Gaikwad will return to form in today's match against the Kolkata Knight Riders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.