சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தற்போது சிஎஸ்கே மீண்டுமொரு தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றையப் போட்டியில் பவர் பிளேவில் சிறப்பான தொடக்கம் கிடைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஹைதராபாதுக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் அவர் ஃபார்முக்குத் திரும்ப தவறினார்.
இந்த நிலையில், ஃபார்முக்குத் திரும்ப நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதனை ருதுராஜ் கெய்க்வாட் தவறவிட்டுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் ரன்கள் குவிக்க ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காமல் சிறப்பாக விளையாடியிருக்கலாம். ஏனென்றால், பவர்பிளேவில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி தேவையான ரன்களை குவித்துவிட்டார். அதனால், களத்தில் அதிக நேரமெடுத்து விளையாடி கெய்க்வாட் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கலாம்.
ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்த பிறகு, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மிகவும் நன்றான பந்தை சந்தித்தார். அந்த பந்தில் அவர் ஆட்டமிழப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், அவர் ஆட்டமிழந்து வெளியேறி மீண்டுமொருமுறை ஏமாற்றமளித்தார். அவர் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறேன். அவர் மனதளவில் அமைதியாக இல்லை என்றார்.
Summary
Former Indian cricketer Ravichandran Ashwin has stated that Chennai Super Kings captain Ruturaj Gaikwad appears to be under immense pressure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



