திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

200 ரன்கள் திரட்டி லக்னௌ தோல்வி!

News image

பஞ்சாப் கிங்ஸ்வெற்றி - AP

Updated On :19 ஏப்ரல் 2026, 11:24 pm IST

ஐபிஎல் 2026 தொடரின் 29-ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் விளாசி 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். கூப்பர் கானலி 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 ரன்களும், ஷஷாங் சிங் 17 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து இமாலய இலக்கை விரட்டிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் திரட்டி தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 43 ரன்களும் மார்க்ரம் 22 பந்துகளில் 42 ரன்களும் திரட்டினர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜாண்சென் 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லக்னௌ அணி 4 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.

Summary

Punjab Kings won by 54 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.