ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.
பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் விளாசி 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். கூப்பர் கானலி 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 ரன்களும், ஷஷாங் சிங் 17 ரன்களும் எடுத்தனர்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி மற்றும் மோஷின் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Lucknow Super Giants, the Punjab Kings, batting first, scored 254 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்ஸர்கள் விளாச நான் பயிற்சி மேற்கொள்வதில்லை: பிரியான்ஷ் ஆர்யா

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

கூப்பர் கானலி ஐபிஎல் 2026ன் கண்டுபிடிப்பு..! சஹால் புகழாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



