மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டி குறித்து...

News image

ஜஸ்ப்ரீத் பும்ரா, வைபவ் சூர்யவன்ஷி. - ஏபி

Updated On :7 ஏப்ரல் 2026, 11:03 am

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றிரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. மும்பை 1ல் வெற்றியும் 1ல் தோல்வியும் பெற்றுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இதுவரையான 2 போட்டிகளில் 31, 52 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (32 வயது) தனது ஃபார்மில் சிறிது கவலையளிக்கிறார். முதல் போட்டியில் விக்கெட் இல்லாமல் 21 ரன்கள், இரண்டாவது போட்டியில் விக்கெட் இல்லாமல் 35 ரன்கள் கொடுத்தும் ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த இருவருக்குமான போட்டி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் 31 போட்டிகளில் விளையாடி, அதில் 16ல் மும்பையும் 14ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

Summary

Vaibhav Suryavanshi against Jasprit Bumrah, who will win in ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.