இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பயம் என்பது துளியும் கிடையாது என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி போட்டியில் எப்படி அதிரடியாக விளையாடுகிறாரோ அதே போன்றுதான் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்யும்போதும் அதிரடியாக விளையாடுவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக வலைப் பயிற்சியின்போது ஸ்டம்புக்கு பந்துவீச முடியாது. அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாசுவார். அவருக்கு பயம் என்பது துளியும் கிடையாது. போட்டிகளில் எப்படி விளையாடுகிறாரோ அதே போன்றுதான் வலைப் பயிற்சியின்போதும் விளையாடுகிறார். புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும். புதிய பந்தில் அதிரடியாக விளையாடுவது மிகவும் கடினம். ஆனால், அவர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய ஷாட்டுகளை விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசினார் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Rajasthan Royals player Ravindra Jadeja has stated that young player Vaibhav Suryavanshi possesses not even a shred of fear.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



