பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸுக்கு, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். குறிப்பாக, பிரியான்ஷ் ஆர்யா அதிரடியில் மிரட்டினார். அவர் 11 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டம் அவருக்குப் பிறகு களமிறங்கிய வீரர்கள் எந்தவொரு அழுத்தமுமின்றி விளையாட உதவியது.
இந்த நிலையில், அதிரடியாக விளையாடிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிரியான்ஷ் ஆர்யா மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் பந்துகளின் லென்த்தை சிறப்பாக கணித்து சிக்ஸர்கள் விளாசினார். மாட் ஹென்றி மற்றும் கலீல் அகமதின் பந்துவீச்சில் அவர் அபாரமாக விளையாடினார். அவர் லெக் திசையில் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர். ஆஃப் திசையிலும் அவரால் நன்றாக விளையாட முடியும். அதனால் அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் என்றார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Cheteshwar Pujara has praised Punjab Kings' young player, Priyansh Arya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்ஸர்கள் விளாச நான் பயிற்சி மேற்கொள்வதில்லை: பிரியான்ஷ் ஆர்யா

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



