மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிஎஸ்எல்: பாகிஸ்தான் வீரர் ஃபஹர் ஸமானுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

பிஎஸ்எல் தொடரில் ஃபஹர் ஸமானுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது குறித்து...

News image

ஃபஹர் ஸமான். - ஐசிசி

Updated On :3 ஏப்ரல் 2026, 8:45 am

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் அந்த நாட்டின் வீரர் ஃபஹர் ஸ்மானுக்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கராச்சி அணிக்கு எதிரான போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடிய போட்டியில் ஃபஹர் ஸ்மான் இந்தத் தவறினை செய்தார். ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலந்தர்ஸ் அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 128/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய கராச்சி கிங்ஸ் 19.3 ஓவர்களில் 131/6 ரன்களில் வென்றது. 19 ஓவர் முடிவில் 115/5 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த ஓவருக்குப் பிறகு கேப்டன் ஷாஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் உடன் ஃபஹர் ஸமான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். அப்போது ஃபஹர் ஸமான் பந்தினை வாங்கி அழுத்திக் கொடுப்பார். பிறகு, நடுவர் பந்தினை வாங்கி சோதித்துப் பார்த்ததில் பந்து சேதமடைந்ததால் கராச்சி அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தை 3 பேர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் ஆராய்ந்து, ஃபஹர் ஸமானின் கோரிக்கையை நிராகரித்தது. பந்தைச் சேதப்படுத்துதல் லெவல் 3 குற்றமென பிஎஸ்எல் குறிப்பிட்டுள்ளது.

Summary

PSL technical committee upholds two-match ban on Fakhar Zaman for ball-tampering.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.