இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்களை அணியில் இருந்து நீக்குமாறு தேர்வுக் குழுவிடம் பரிந்துரைத்தாக பல ஆண்டுகளாக பரவி வருகின்றன.
யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், கடந்த காலங்களில் பலமுறை தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனிதான் அழித்தார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதேபோல், 1980-களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ், அணியிலிருந்து தன்னை நீக்கியபோது கொல்ல விரும்பியதாக கடந்தாண்டு யோகராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை நேர்காணல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட யுவராஜ் சிங்கிடம், யோகராஜ் சிங்கின் பேட்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், ”நீங்கள் பேசியது சரியல்ல என்று தந்தையிடம் கூறியுள்ளேன். கபில் தேவ் மற்றும் எம்எல் தோனியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பட்டீல் அளித்த நேர்காணல் ஒன்றில், ”யுவராஜ் சிங்கை தேர்வு செய்ய வேண்டாம் என்று தேர்வுக் குழுக் கூட்டத்திலோ, போட்டியின் போதோ, வெளிநாட்டுப் பயணங்களின் போதோ எந்த சூழ்நிலையிலும் ஒருமுறைகூட தோனி கூறியது கிடையாது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
I like to apologize to Kapil Dev and Dhoni! — Yuvraj Singh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம்: ராஜ்நாத் சிங்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



