சேப்பாக்கத்தில் சகோதரர்கள் சர்ஃபராஸ் கான் (28 வயது), முஷீர் கான் (21 வயது) சந்தித்து கொண்ட புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
சகோதரர்களான சர்ஃபராஸ் கான் சிஎஸ்கே அணிக்கும் முஷீர் கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடுகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த நௌஷாத் கான் என்பவருக்குப் பிறந்தவர்கள்தான் சர்ஃபராஸ் கான், முஷீர் கான். இருவருமே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி நாளை இரவு 7.30 மணிக்கு பஞ்சாபை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியுடனும், பஞ்சாப் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சர்ஃபராஸ் கான் முதல் போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கி அசத்தலாக விளையாடினார். இருப்பினும் ஜடேஜா ஓவரில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். மாறாக, அவரது சகோதரருக்கு இன்னும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு கிங்ஸ் சகோதரர்கள் சந்திப்பு” எனக் குறிப்பிட்டுள்ளது. ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றொவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் விளையாடுகிறார்கள்.
Summary
Brother and Brother at Chepauk... Sarfaraz Khan and Musheer Khan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



