மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்!

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அறிவித்துள்ளார்.

News image

சர்ஃபராஸ் அகமது - படம் | ஐசிசி

Updated On :15 மார்ச் 2026, 1:15 pm

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சர்ஃபராஸ் அகமது கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடவில்லை.

இந்த நிலையில், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சர்ஃபராஸ் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவில் அண்மையில் உறுப்பினராக இணைந்த சர்ஃபராஸ் அகமது, டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

விக்கெட் கீப்பர் பேட்டரான சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 100-க்கும் அதிகமான போட்டிகளில் பாகிஸ்தான் அணியைக் கேப்டனாக அவர் வழிநடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக இரண்டு ஐசிசி கோப்பைகளை (யு19 உலகக் கோப்பை 2006 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2017) வென்று கொடுத்த ஒரே கேப்டன் சர்ஃபராஸ் அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Pakistan captain Sarfaraz Ahmed has announced his retirement from all forms of cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.