நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தென்னாப்பிரிக்காவுக்கு 3-வது வெற்றி; புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம்!

உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :13 அக்டோபர் 2025, 5:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷோர்னா அக்தர் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷர்மின் அக்தர் 50 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்களும், ஃபர்ஹானா ஹோக் 30 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நடின் டி கிளர்க் மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு 3-வது வெற்றி

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக சோல் டிரையான் 62 ரன்களும், மாரிஸேன் காப் 56 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, நடின் டி கிளர்க் 37* ரன்கள், லாரா வோல்வர்ட் 31 ரன்கள், அனிக்கா போஸ்ச் 28 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் நஹிதா அக்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரபேயா கான், ஃபஹிமா கட்டூன் மற்றும் ரிது மோனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த இந்திய அணி 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

summary

South Africa won the World Cup match against Bangladesh by 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.