சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜனவரி 18) அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு, இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை.
இதையும் படிக்க: அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!
முக்கியமான வீரர்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சூர்யகுமார் யாதவ் அதிகம் மிஸ் செய்யப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சூர்யகுமார் யாதவ்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார். அவர் மைதானத்தில் அனைத்துப் புறங்களிலும் ஸ்கோர் செய்யும் திறன் கொண்டவர். ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் அவரால் ஓவருக்கு 9 ரன்கள் அடிக்க முடியும். அவரது அதிரடியான பேட்டிங்கால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அணியில் ஃபார்மில் இல்லாத முதல் 3 பேரின் மீது பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளது. சூர்யகுமார் எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி நன்றாக விளையாடக் கூடியவர் என்றார்.
இதையும் படிக்க: ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களுக்கு சூர்யகுமார் யாதவின் நகைச்சுவையான பதில்!

சூர்யகுமார் யாதவ் கிண்டல் செய்வதாக நினைத்தேன்: முகமது சிராஜ்

விராட் கோலி சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

அபார பந்துவீச்சால் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த அமெரிக்கா; காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

