எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image
அன்ரிச் நோர்க்யா
Updated On :16 ஜனவரி 2025, 7:12 am

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடத்தப்படவிருக்கின்றன.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்கள் அணி வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் அன்ரிச் நோர்க்யா முகுதுவலி காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஜூனில் நடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பின்னர் வேறெந்த சர்வதேசப் போட்டிகளிலும் அன்ரிச் நோர்க்யா விளையாடவில்லை. இருப்பினும் அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அணியில் விலகுவதை அவர் உறுதிசெய்தார்.

இதுபற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுகுவலி காரணமாக பிரிட்டோரியா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்யா, எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகுகிறார்.

அவர் பிப்ரவரி 21 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளது.

அன்ரிச் நோர்க்யா கடந்த ஆண்டுகளில் மட்டும் 6 ஐசிசி தொடர்களில் 3 தொடர்களை காயம் காரணமாக தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.