தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்ப அக்‌ஷர் படேல் தயார்: ஹர்பஜன் சிங்

ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்புவதற்கு அக்‌ஷர் படேல் தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

News image
ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல் (கோப்புப் படம்)
Updated On :12 ஜனவரி 2025, 12:45 pm

DIN

ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்புவதற்கு அக்‌ஷர் படேல் தயாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அக்‌ஷர் படேலை தேர்வு செய்வேன்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல் இருவரில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவரது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

அவர் பேசியதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேலை தேர்வு செய்வேன். ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு அளித்து வந்த பங்களிப்பை வழங்க அக்‌ஷர் படேல் தயாராகிவிட்டதாக நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.