டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image
ஜெரால்ட் கோட்ஜி
Updated On :6 பிப்ரவரி 2025, 3:26 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், பிரிட்டோரியாவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் பந்துவீசும்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜெரால்ட் கோட்ஜி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதிப்பட்டாலும் எஸ்ஏ-20 தொடரின் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ராப் வால்டர், லாகூரில் நியூசிலாந்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்தபோது ஜெரால்ட் கோட்ஜியும் அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.