விராட் கோலி, ரோஹித்தின் ஃபார்ம்தான் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு முக்கியமான கருவி என ரெய்னா கூறியுள்ளார்.
வரும் பிப்.19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் துவங்கி மார்ச் 9ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன. இந்த ஹைபிரிட் மாடல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்திய அணி நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தானை குரூப் ஸ்டேஜ் சுற்றில் எதிர்கொள்கின்றன.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:
ரோஹித் அதிரடி காட்டுவார்
ஒருநாள் உலகக் கோப்பை 2023க்குப் பிறகு ரோஹித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அப்போது முதல் 119-120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். அது அவரை சிறந்த ஒருநாள் வீரராக மாற்றியுள்ளது.
ரோஹித், விராட் கோலிக்கு பழைய போட்டிகளில் வலுவான ரன்கள் குவித்த நம்பிக்கை இருக்கிறது. பெரிய ரன்களை குவிக்க இருவருக்கும் திறமை இருக்கிறது.
ரோஹித், கோலி இருவரும் நன்றாக விளையாடினால் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஷுப்மன் கில்லுடன் யார் இறங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ரோஹித் உடன் இருந்தால் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்.
ரோஹித் ரன்கள் அடித்தால் அது அவரது தலைமைப் பண்பிலும் பிரதிபலிக்கும். இதுதான் அவரது கடைசி ஐசிசி தொடர். அதனால் இதை வென்றால் அவருக்கு சிறப்பான முடிவாக இருக்கும்.
சுழல்பந்து முக்கியம்
ஜடேஜா முக்கியமாக விளையாட வேண்டும். குல்தீப் யாதவ் காயத்துக்குப் பிறகு அதிகமான போட்டிகள் விளையாட வில்லை. அதே சமயம், அக்ஷர் படேல் சிறப்பாக விளையாடி வருகிறார். துபையில் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும். அதனால்தால் குல்தீப், ஜடேஜா, அக்ஷர் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள்.
ரோஹித் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் எப்படி விளையாடினார் என்பதைப் பார்த்தோம். இறுதிப் போட்டியிலேயே அவர் அப்படித்தான் விளையாடினார். அதனால், அவர் அப்படித்தான் விளையாடுவார் என நினைக்கிறேன்.
விராட் கோலிக்கு தெரியும்
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொருத்தவரை விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டுமெனத் தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை குவித்துள்ளார். அதனால் அவரது ஆற்றல் சாதரணமாகவே வேற லெவலில் இருக்கும்.
நாக்பூர், அகமதாபாத், கட்டாக் ஆகிய திடல்களில் நடைபெறும் போட்டிகள் அதிக ரன்களை குவிக்க ஏதுவானதாக அமைந்திருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெற்றிக்கு ரன்கள், ஜனநாயகத்துக்கு வாக்குகள்! தேர்தல் ஆணையம் நூதன பிரசாரம்!

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்: விராட் கோலி, ரோஹித் தரமிறக்கம்!
த்ருஷ்டி...

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

