டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெற்றிக்கு ரன்கள், ஜனநாயகத்துக்கு வாக்குகள்! தேர்தல் ஆணையம் நூதன பிரசாரம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் நூதன பிரசாரம் பற்றி...

News image
இந்திய வீரர்கள் - Photo: BCCI
Updated On :16 பிப்ரவரி 2026, 3:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”கொழும்பில் வெற்றி! டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரானஅற்புதமான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

அழுத்தம் நிறைந்த போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

உங்கள் இன்னிங்ஸை விளையாட, படிவம் 6-ஐ நிரப்பி இன்றே உங்களை ஒரு வாக்காளராகப் பதிவு செய்யுங்கள்!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.