யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

த்ருஷ்டி...

மூடுபனி, புகை மூட்டம், கனமழையின்போது விமானங்கள் தரையில் இறங்கவும்; புறப்படும்போது ஓடுபாதையின் தெரிவு நிலையை அளவிடவும் வடிவமைக்கப்பட்டது 'த்ருஷ்டி' என்னும் கருவி.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 4:05 pm IST

மூடுபனி, புகை மூட்டம், கனமழையின்போது விமானங்கள் தரையில் இறங்கவும்; புறப்படும்போது ஓடுபாதையின் தெரிவு நிலையை அளவிடவும் வடிவமைக்கப்பட்டது 'த்ருஷ்டி' என்னும் கருவி. இது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கருவியானது, விமானப் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. இதைக் கண்டுபிடித்த தேசிய விண்வெளி ஆய்வக விஞ்ஞானியாகப் பணிபுரிந்த முனைவர் சுபாவுக்கு, 'பத்மஸ்ரீ' விருது அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய விண்வெளி ஆய்வகப் பணியில் 1974-ஆம் ஆண்டில் சுபா சேர்ந்தார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், பொறியியல், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவருடைய பணி இருந்தது. ஓய்வு பெற்றும் அவர் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

Story image

'த்ருஷ்டி' உருவாக்கப்படும் முன்பு இதுபோன்ற கருவிகள் பின்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் விலை அதிகம் என்பதோடு, பராமரிப்பும் கடினமாக இருந்தது. உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது.

2010-களின் தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் இணைந்து தேசிய விண்வெளி ஆய்வகம் இணைந்து 'த்ருஷ்டி'யை உருவாக்கியது. அதிக உணர்வுத் திறனைக் கொண்ட இந்தக் கருவியின் மூலமாக சர்வதேச தர

நிலைகளைப் பின்பற்றி, தரைமட்டத்தில் இருந்து நான்கு மீட்டர் வரை தெரிவுநிலையைக் கணிக்கமுடியும்.

மோசமான தெரிவுநிலை கண்டுபிடிக்கப்பட்டவுடன்,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, விமானிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையும் செய்ய முடிகிறது. இந்த வெற்றியின் பரிசாக பெங்களூரில் தற்போது வசிக்கும் முனைவர் சுபாவுக்கு 'பத்மஸ்ரீ' விருது அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.