டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கை - மே.இ.தீவுகளுக்கு இடையேயான டி20, ஒருநாள் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

News image
- படம் | ஐசிசி
Updated On :28 செப்டம்பர் 2024, 2:12 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

அக்டோபரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 13 டம்புல்லாவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 20-26 ஆம் தேதி இடைவெளியில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

நம்பிக்கை மிகுந்த இலங்கை அணி

இலங்கை அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருவது போன்ற விஷயங்கள் இலங்கை அணியின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதே சமயம், டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அண்மைக் காலமாக ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் அண்மையில் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டி20 தொடர் விவரம்

முதல் டி20 - டம்புல்லா, அக்டோபர் 13

2-வது டி20 - டம்புல்லா, அக்டோபர் 15

3-வது டி20 - டம்புல்லா, அக்டோபர் 17

ஒருநாள் தொடர் விவரம்

முதல் ஒருநாள் - கண்டி - அக்டோபர் 20

2-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 23

3-வது ஒருநாள் - கண்டி - அக்டோபர் 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.