உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 241 ரன்கள் எடுத்துள்ளது. 242 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டங்கள் வரலாற்றில் முதலில் பேட் செய்து 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்தது 4 முறை.
- 1983 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- 1996 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.
- 1999 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- 2015 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதில், 1983-இல் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் எதிரணியை வெற்றி இலக்கை அடையச் செய்யாமல் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. 241 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்த மற்ற மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளன.
எனவே, இந்த முறை கேன் வில்லியம்ஸன் இங்கிலாந்து அணியை 241 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் 1983-இல் கபில் தேவ் வென்றதைப் போல் அதே லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வெல்லலாம். 1983-இல் கபில் தேவ் பெற்றுத் தந்த உலகக் கோப்பை தான் இந்திய அணியின் முதல் உலகக் கோப்பையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


