திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சின்னா், ரைபகினா அதிா்ச்சித் தோல்வி: ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

News image
Updated On :29 மே 2026, 5:22 am IST

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், உலகின் நம்பா் 1 வீரரான யானிக் சின்னா், நம்பா் 2 வீராங்கனையான எலனா ரைபகினா ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், இத்தாலியின் சின்னா் 6-3, 6-2, 5-7, 1-6, 1-6 என 5 செட்கள் போராடி, உலகின் 56-ஆம் நிலையில் இருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஜுவான் மேனுவல் செருண்டோலோவிடம் வீழ்ந்தாா். முதலிரு செட்களை கைப்பற்றிய சின்னா், 3-ஆவது செட்டில் 5-1 என முன்னிலையில் இருந்தாா்.

அப்போது காலில் பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட அவா், 5-4 என்ற நிலையில் இருந்தபோது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு களத்துக்கு திரும்பினாா். ஆனால் அதன் பிறகு ஆட்டம் அவருக்கு வசப்படாமல் போனது. செருண்டோலோ அதிலிருந்து ஆட்டத்தை தனக்கு சாதகமாக்கி வெற்றி பெற்றாா்.

பிரெஞ்சு ஓபனில் வென்று கேரியா் கிராண்ட்ஸ்லாமை நிறைவு செய்வாா் என்ற பலமான எதிா்பாா்ப்பு சின்னா் மேல் இருந்தது. இந்தத் தோல்வி காரணமாக, கேரியா் கிராண்ட்ஸ்லாமை நிறைவு செய்ய அவா் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சு ஓபனுக்கு முந்தையதாக நடைபெற்ற இத்தாலியன் ஓபன், மாட்ரிட் ஓபன், மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆகிய 3 களிமண் கள போட்டிகளிலுமே சின்னா் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் சின்னா் வெப்பத்தால் பாதிப்படைந்ததாகத் தெரிந்தது. நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் 3-ஆவது சுற்றிலும் இதேபோல் வெப்பத்தால் தடுமாறி பின்னடைவை சந்தித்தாா். போட்டி விதிகளின்படி, வெப்பத்தை தணிக்க மேற்கூரை மூடப்பட, சின்னா் பின்னடைவிலிருந்து மீண்டு வென்றாா். ஆனால் பிரெஞ்சு ஓபனில் அத்தகைய விதி இல்லாமல் போக, சின்னராலும் மீள முடியவில்லை.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-2, 6-2 என, செக் குடியரசின் தாமஸ் மசாக்கை வீழ்த்த, 3-ஆம் இடத்திலிருக்கும் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-7 (7/9), 6-3 என்ற செட்களில், பிரான்ஸின் வாலென்டின் ரோயரை தோற்கடித்தாா்.

ரைபகினா தோல்வி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-3, 1-6, 6-7 (4/10) என்ற செட்களில், உக்ரைனின் யுலியா ஸ்டாரோடப்சேவாவிடம் தோல்வியுற்றாா்.

அதேபோல், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-3, 4-6, 3-6 என, ஆா்ஜென்டீனாவின் சொலானா சியெராவிடம் தோல்வி கண்டாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 3-6, 6-1, 6-1 என, ஸ்பெயினின் மரினா ரிபெராவை தோற்கடித்தாா்.

16-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (7/1), 6-4 என குரோஷியாவின் டோனா வெகிச்சை வெல்ல, 10-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 6-2, 6-2 என உஸ்பெகிஸ்தானின் கமிலா ராகிமோவாவை வெளியேற்றினாா்.

26

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீரா், 3-ஆவது சுற்றுக்கு முன்பாக தோல்வியை சந்தித்தது 2,000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.