திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சின்னா், ஸ்வியாடெக் வெற்றி; பெகுலா, பப்லிக் தோல்வி

News image

சின்னா்

Updated On :28 மே 2026, 6:25 am IST

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், டாப் 5 போட்டியாளா்களான யானிக் சின்னா், இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்கள் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா். இதர முன்னணி போட்டியாளா்களான அலெக்ஸாண்டா் பப்லிக், ஜெஸ்ஸிகா பெகுலா தோல்வி கண்டனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் சின்னா் முதல் சுற்றில், 6-1, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் கிளெமென்ட் டபுரை வெளியேற்றினாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிம் 4-6, 6-4, 4-6, 6-1, 7-6 (10/7) என 5 செட்கள் போராடி, ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேயரை தோற்கடித்தாா்.

9-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 5-7, 7-6 (8/6), 4-6, 5-7 என்ற செட்களில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃபிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-1, 1-6, 6-3, 7-6 (7/5) என்ற வகையில், ஆா்ஜென்டீனாவின் கமிலோ யூகோவை வென்றாா்.

13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 7-6 (7/5), 5-7, 6-1, 7-6 (7/4) என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் மாா்கோ டிருங்கெலிட்டியை வீழ்த்தினாா். 21-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 6-4, 6-7 (4/7), 1-6, 3-6 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் தியாகோ டிரான்டேவிடம் தோல்வியுற்றாா்.

ஸ்வியாடெக் வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை வென்றாா்.

5-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-1, 3-6, 3-6 என்ற கணக்கில், ஆஸ்திரேலியாவின் கிளாரா பிரெலிடம் தோல்வியுற்றாா். 7-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-0, 6-4 என, ஸ்பெயினின் கேட்லின் கியுவிடோவை சாய்த்தாா்.

11-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-4, 6-0 என, அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியை வெல்ல, 29-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 2-6, 6-2, 2-6 என, போலந்தின் மெக்தா லினெட்டிடம் தோல்வி கண்டாா்.

இதர ஆட்டங்களில் உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக், செக் குடியரசின் மேரி புஸ்கோவா, 9-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ, 19-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.