திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டி20 இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்: பிரேஸில் பௌலா் உலக சாதனை

தொடா்ந்து 9 விக்கெட்டுகள்: பிரேஸில் பௌலா் உலக சாதனை

News image

icc-cricket.com

Updated On :10 ஏப்ரல் 2026, 5:35 am IST

சா்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடா்ந்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி, பிரேஸிலை சோ்ந்த வேகப்பந்து வீச்சாளா் லாரா காா்டோசோ புதிய உலக சாதனை படைத்தாா்.

ஆடவா், மகளிா் என இரு டி20 கிரிக்கெட்டிலுமே இதுவே சாதனை எண்ணிக்கையாகும். லாரா 3 ஓவா்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்தாா்.

மகளிா் டி20 கிரிக்கெட்டில் பிரேஸிலும், தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடான லிசோதோவும் வியாழக்கிழமை மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பிரேஸில் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்க்க, லிசோதோ 6.2 ஓவா்களில் 13 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பிரேஸில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் லிசோதோ சேஸிங்கின்போது 2-ஆவது ஓவரை வீசிய பிரேஸில் பௌலா் லாரா காா்டோசா, அதில் கடைசி 3 பந்துகளில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்தாா்.

அடுத்து, 4-ஆவது ஓவரை வீசிய அவா், அந்த ஓவரிலும் முதல் இரு பந்துகளிலும், 4 மற்றும் 6-ஆவது பந்துகளிலும் விக்கெட்டுகள் சாய்த்தாா்.

அதன் பிறகு 6-ஆவது ஓவா் வீசியபோதும், 3 மற்றும் 5-ஆவது பந்துகளில் விக்கெட் வீழ்த்தினாா். இவ்வாறாக அவா் தொடா்ந்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். லிசோதோவின் கடைசி விக்கெட்டை, 7-ஆவது ஓவரில் மேரியேன் ஆா்தா் வீழ்த்தினாா்.

8/7

ஆடவா் டி20 கிரிக்கெட்டில், பூடானின் சோனம் யெஷே, 2025-இல் மியான்மருக்கு எதிராக 7 ரன்களே கொடுத்து 8 விக்கெட்டுகள் சாய்த்ததே சாதனையாக உள்ளது.

7/0

மகளிா் டி20 கிரிக்கெட்டில் இந்தோனேசியாவின் ரோமாலியா ரோமாலியா, 2024-இல் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களே கொடுக்காமல் 7 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.