ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுகங்கள்!

ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் என இரு சுற்றுப்பயணங்களுக்கும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புதுமுகங்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:20 pm

சநகன்

ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் என இரு சுற்றுப்பயணங்களுக்கும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புதுமுகங்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு ஷர்துல் தாக்குரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள்-டி20 போட்டியில் ஃபயிஷ் ஃபஸல் சஹால், ஜயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய புதுமுகங்களும் தேர்வாகியுள்ளார்கள். அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பைக் காண்போம்.

ஷர்துல் தாக்குர்

Story image

டெஸ்ட் அணிக்கு 24 வயது ஷர்துல் தாக்குர் தேர்வாகியுள்ளார். ரஞ்சிப் போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடிய ஷர்துல், ரஞ்சி இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு 5 விக்கெட்டுகளும் அடங்கும். 41 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 7-ம் இடம் பிடித்தார். இந்திய டெஸ்ட் அணியில் பும்ராவுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஷர்துல் தாக்குருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஐபிஎல்-லில் ஷர்துல் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. ரஞ்சி போட்டியில் திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாகவே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபயிஷ் ஃபஸல்

Story image

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது இடக்கை தொடக்க வீரர், ஃபயிஷ் ஃபஸல். இராணி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றார். மேலும் தியோதர் கோப்பைக்கான இறுதிப் போட்டியிலும் இந்தியா ஏ அணிக்காக விளையாடி சதமடித்தார். 2003-லிருந்து விதர்பா அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இவரும் ஐபிஎல்-லில் போட்டியில் இடம்பெறாதபோதும் (2011க்குப் பிறகு ஐபிஎல்-லில் தேர்வாகவில்லை) உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாஹல்

Story image

இந்த ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரரான பெங்களூர் அணியின் 25 வயது சாஹல், இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காகவும் ஐபிஎல்-லில் முதலில் மும்பை அணிக்காகவும் பிறகு பெங்களூர் அணிக்காகவும் தேர்வானார் சாஹல். இந்த ஐபிஎல் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஜெயந்த் யாதவ்

Story image

டெல்லியைச் சேர்ந்த 26 வயது ஜெயந்த் யாதவ், சுழற்பந்து வீச்சாளர். இந்த ஐபிஎல்-லில் டெல்லி அணி சார்பாக விளையாடியவர். 

மன்தீப் சிங்

Story image

24 வயது மன்தீப் சிங்கும் ஐபிஎல் வழியாக பலருக்கும் அறிமுகமானவர். நம்பிக்கையான இளம் பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

கருண் நாயர்

Story image

24 வயது கருண் நாயர், சமீபமாக, முதல் தர கிரிக்கெட்டிலும் (கர்நாடகா) ஐபிஎல்-லிலும் (டெல்லி) அதிக ரன்கள் குவித்து கவனம் பெற்றவர். இதற்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தாலும் இன்னமும் சர்வதேசப் போட்டியில் அவர் விளையாடியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.