ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது தோனி அணி!
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தோனி கேப்டனாக உள்ள ஓர் அணி, பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஐபிஎல் போட்டியில் ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி. இதனால் அரையிறுதி (பிளே ஆஃப்) வாய்ப்பை இழந்துள்ளது தோனியின் புணே அணி.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 6 விக்கெட் வீழ்த்திய புணே அணியின் ஸம்பா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தோல்வியால், தோனியின் புணே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதற்குத் தகுதிபெற குறைந்தபட்சம் 7 வெற்றிகளாவது தேவைப்படுகிற நிலையில் புணே அணி இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளை வென்றாலும் அதனால் 12 புள்ளிகளே எடுக்கமுடியும். இதனால் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் எடுக்கமுடியாமல் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறுகிற வாய்ப்பை இழந்துள்ளது.
சிலசமயம் ஏழு வெற்றிகள் கூட பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கு உறுதியளிக்காது. உதாரணமாக, சென்றமுறை கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் 7 வெற்றிகள் பெற்றபோதும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போனது. இதன் அடிப்படையில் புணே அணி இந்தமுறை பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறாது என்றே கருதமுடியும்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தோனி கேப்டனாக உள்ள ஓர் அணி, பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணி அனைத்து போட்டிகளிலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்தச் சாதனை வேறு எந்த அணிக்கும், வேறு எந்த கேப்டனுக்கும் கிடையாது.
இந்நிலையில் தற்போது புணே கேப்டனாக உள்ள தோனி முதல்முறையாக இப்படிப்பட்ட ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளார்.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
| ஹைதராபாத் | 10 | 7 | 3 | 14 | +0.558 |
| குஜராத் | 11 | 7 | 4 | 14 | -0.138 |
| கொல்கத்தா | 10 | 6 | 4 | 12 | +0.206 |
| டெல்லி | 9 | 5 | 4 | 10 | +0.309 |
| மும்பை | 10 | 5 | 5 | 10 | -0.447 |
| பெங்களூர் | 9 | 4 | 5 | 8 | +0.032 |
| புணே | 11 | 3 | 8 | 6 | +0.087 |
| பஞ்சாப் | 10 | 3 | 7 | 6 | -0.567 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...