4 வெற்றிகள், 3 தோல்விகள், 7 டிராக்கள் என ஆனந்துக்கு இந்தப் போட்டி நன்றாகவே அமைந்தது. கடைசிப் பகுதி வரை அவரும் வெற்றியாளர்களில் ஒருவராக இருந்தார். 11-ஆவது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தினார். வாழ்வா, சாவா சுற்றான இதில் வென்றதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட ஆனந்த், 6.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் பாபியானோ கருணாவுடன் முதலிடத்தில் இருந்தார். 10-ஆவது சுற்றில் அமெரிக்காவின் பாபியானோ கருணாவிடம் தோற்றதால் நெருக்கடியில் சிக்கினார். 11-ஆவது சுற்றில் வென்றால் மட்டுமே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், செர்ஜி கர்ஜாகினைத் தோற்கடித்தார்.