கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்த் அதிர்ச்சி தோல்வி! (அலசல் வீடியோ)
மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினுடனான ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மாஸ்கோவில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினுடனான ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 11 முதல் 30 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள மற்றொரு வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
இதில் விஸ்வநாதன் ஆனந்த், வெஸலின் டோபலோவ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இத்தாலியின் ஃபாபியானோ கருணா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
3 சுற்றுகளின் முடிவில், ஆனந்த் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஆரோனியன், கர்ஜாகின் ஆகியோரும் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார்கள். 4-வது சுற்றில் ஆனந்த், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொண்டார்.
முதலிடத்தில் உள்ள இருவர் மோதுவதால் பலத்த எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி தொடங்கியது. 25 வயது கர்ஜாகின், ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாகப் போற்றப்படுபவர். 2002-ல், 12-வது வயதில் உலகின் இளம் கிராண்ட்மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தவர். இதுபோல பல சாதனைகளுக்கு உரியவர் என்றாலும் அவர் விஸ்வநாதன் ஆனந்திடம் மட்டும் இதுவரை ஒரு போட்டியில்கூட ஜெயித்ததில்லை. இருவரும் மோதிய 26 போட்டிகளில் ஆனந்த் 8 முறை ஜெயித்துள்ளார். மீதமுள்ள போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இதனால் இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார் ஆனந்த்.
வெள்ளை நிறக் காய்களில் ஆடிய கர்ஜாகின், 2-வது நகர்த்தலிலேயே (e3 ) தனித்தன்மையுடன் ஆடினார். இதனால் ஆரம்பத்திலிருந்தே அவர் ஆனந்துக்கு நெருக்கடியை உண்டுபண்ணினார். கர்ஜாகினின் 8.Qc2, 9.h4 ஆகிய நகர்த்தல்கள் பாராட்டுப் பெற்றன. இதுகுறித்து பின்ன பேசிய கர்ஜாகின், இந்தப் புதுமையான நகர்த்தல்களுக்காக எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
18-வது (Ba6) மற்றும் 21-வது நகர்த்தல்களில் (Qd6) தவறுகளைச் செய்தார் ஆனந்த். அதிலும் Qd6 நகர்த்தலுக்குப் பிறகு ஆனந்தால், தோல்வியிலிருந்து தப்புவது கடினமாகிவிட்டது. 43-வது நகர்த்தலில் இருவரும் சரிசமமான காய்களைக் கொண்டிருந்தாலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் ஆனந்த்.
4-வது சுற்றுகளின் முடிவில், 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் கர்ஜாகின். 2.5 புள்ளிகளுடன் ஆரோனியன் 2-ம் இடத்தில் உள்ளார். 2 புள்ளிகள் கொண்ட ஆனந்த் 3-ம் இடம் பெற்றுள்ளார்.
ஆனந்த், தனது 5-வது சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் ஹிகாரு நகமுராவை எதிர்கொள்கிறார்.
இந்த ஆட்டம் பற்றி செஸ் நிபுணர் டேனியல் கிங்கின் அலசல்:

நன்றி: PowerPlayChess

ஆனந்துடனான வெற்றி குறித்து கர்ஜாகின்

நன்றி: ChessBase India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...