நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிதிப் பற்றாக்குறையால் ஆடுகளம் அமைப்பதில் தாமதம்

திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 2-ஆவது பெரிய உள்விளையாட்டு அரங்கில் நிதிப் பற்றாக்குறையால் மரத்தளத்தினாலான ஆடுகளம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிமுடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:26 pm

ஆ. நங்கையார் மணி

திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 2-ஆவது பெரிய உள்விளையாட்டு அரங்கில் நிதிப் பற்றாக்குறையால் மரத்தளத்தினாலான ஆடுகளம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிமுடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கு தமிழகத்தின் மிகப் பெரிய உள்விளையாட்டு அரங்காக திகழ்கிறது. அதற்கடுத்தபடியாக திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 2-ஆவது பெரிய உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி மைதானம் அருகே உள்ள காலி இடத்தில் (14ஆயிரம் சதுர அடி) உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி ரூ.3.60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சி கூடம் (ஜிம்), 200 வீரர்கள் தங்குவதற்கான 9 அறைகள், 300 பேர் அமரும் வகையிலான பார்வையாளர் மாடம் (கேலரி), பயிற்சியாளர் தங்கும் அறை, அலுவலகம் என பல்நோக்குடன் கூடிய உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி கடந்த 2013-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.

கட்டுமானப் பணிகள், மின்னொளி வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து 8 மாதங்களாகிவிட்டன. ஆனால் நிதி பற்றாக்குறையின் காரணமாக மரத்தளத்தினாலான ஆடுகளம் அமைக்கும் பணி (உட்டன் ஃப்ளோர்) இதுவரை நடைபெறவில்லை. இதனால் உள்விளையாட்டு அரங்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

14 ஆயிரம் சதுரடியில் மரத்தளம் (ஆடுகளம்) அமைக்க வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டால் ஒரே நேரத்தில் 9 இறகுப் பந்து போட்டிகள், 2 வாலிபால் போட்டிகள், 1 கூடைப்பந்து போட்டி, 3 கபடி போட்டிகளை நடத்த முடியும்.

சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் இந்த உள்விளையாட்டு அரங்கின் மூலம், சென்னைக்கு வெளியே சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதனால் ஊரகப் பகுதிகளில் உள்ள இளம் வீரர்கள் உத்வேகம் பெறுவார்கள். அதன்மூலம் ஏராளமான திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகுவார்கள் என விளையாட்டு ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ரூ.3.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்விளையாட்டரங்கில் ஆடுகளம் அமைப்பதை தாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது. இது யானையை வாங்கிவிட்டு துரட்டியை வாங்க தாமதப்படுத்துவதுபோல் இருக்கிறது. எனவே ஆடுகளம் அமைக்கும் பணியை விரைவில் முடித்து, உள்விளையாட்டரங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ரூ.75 லட்சம் நிதிக்காக காத்திருப்பு:இதுகுறித்து விளையாட்டுத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது:

ஆடுகளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள ரூ.75 லட்சம் நிதி தேவைப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில், நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.