/

ஹர்பஜனை ஏன் ஆஸ்திரேலியா தொடருக்குத் தேர்வு செய்யவில்லை? : டபிள்யூவி ராமன் கேள்வி

வங்கதேசத் தொடருக்கு ஹர்பஜன் சிங்கைத் தேர்வு செய்தது குறித்து பலவிதமான விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில்...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:38 am

சநகன்

வங்கதேசத் தொடருக்கு ஹர்பஜன் சிங்கைத் தேர்வு செய்தது குறித்து பலவிதமான விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை ஏன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்குத் தேர்வு செய்யவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இணையத்தளம் ஒன்றுக்கு டபிள்யூவி ராமன் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

ஹர்பஜனின் தேர்வு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதே தேர்வுக்குழு தான் கடந்த 2 வருடங்களாக அவரைச் சீந்தக்கூட இல்லை. அவருடைய தேர்வின் மூலம் இந்தியாவில் தரமான இளம் ஸ்பின்னர்கள் இல்லை என்பது தெரியவருகிறது. ஆனால், சரியான சமயத்தில் ஹர்பஜனைத் தேர்வு செய்துள்ளார்களா என்று பார்க்கிறேன்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏனெனில் இங்கிலாந்தில் ஜடேஜா சரியாக பந்துவீசவில்லை. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் அஸ்வின் அணியின் முன்னணி ஸ்பின்னராகவும் இல்லை.

ஐபிஎல்-லில் நன்றாக பந்து வீசியதால் ஹர்பஜனை ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்திருக்கலாம். வேண்டுமென்றால் பிறகு இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கும் தேர்வு செய்திருக்கலாம். இப்போது தேர்வாளர்கள் மீண்டும் அவரிடம் சென்றிருப்பதால் உடனே அவரை அணியிலிருந்து நீக்குவதும் சரியாக இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.