/

நான் இறப்பதற்குமுன் ஒரு இந்திய தடகள வீரர் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லவேண்டும்: மில்கா சிங் உருக்கம்

என்னால் 1960-ல் சாதிக்கமுடியவில்லை. ஆனால் ஒரு இந்திய தடகள வீரர் அதைச் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:28 am

சநகன்

1950களில் உலகளவில் சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக அறியப்பட்டவர், மில்கா சிங். 1960 ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத்  தவறவிட்டார். (400 மீ. ஓட்டப்பந்தயத்தை 45.60 நொடிகளில் ஓடி நான்காம் இடம் பிடித்தார்.) காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான். இதனால் 'ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)' என்கிற பட்டமும் பெற்றார். அவருக்கு நீண்டநாளாக ஓர் ஆதங்கம் உண்டு.

தனியார் விழா ஒன்றில் அவர் தன் மனக்குறையைப் பகிர்ந்துகொண்டார்.

‘என்னுடைய கடைசி ஆசை என்னவென்றால், ஓர் இந்திய தடகள வீரர், நம் நாட்டுக்காக ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லவேண்டும் என்பதுதான். என்னால் 1960-ல் சாதிக்கமுடியவில்லை. ஆனால் ஒரு இந்திய தடகள வீரர் அதைச் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். 1960 ஒலிம்பிக்ஸின்போது உலகத்துக்கே தெரியும், 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் பதக்கம் வெல்லமுடியும் என்றால் அது மில்கா சிங் தான் என்று. ஆனால் அதைச் செய்யத் தவறவிட்டேன்.

ஒலிம்பிக்ஸ் தடகளப் போட்டிகளில் வெகுசில இந்தியர்களே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள். அவர்களிலும் யாரும் பதக்கம் வென்றதில்லை. உலகின் நெ.1 விளையாட்டு, தடகளம் தான். நீங்கள் அதில் ஒரு பதக்கம் பெற்றால், உலகம் உங்கள் பெயரை நினைவில் கொள்ளும். உசைன் போல்ட்டால் ஜமைக்காவுக்கு எவ்வளவு பெருமை! ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசிய கீதத்தை ஒலிக்க வைக்க நான் தவறிவிட்டேன். நான் இறப்பதற்கு முன் ஓர் இந்திய தடகள வீரர் அதைச் செய்யவேண்டும்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.