முரளி விஜய் இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கிறார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஜூலை 2013க்குப் பிறகு இப்போதுதான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இணையத்தளம் ஒன்றுக்கு முரளி விஜய் பேட்டியளித்துள்ளார். ஒருநாள் அணியில் நிரந்த இடம் பிடிக்காதது பற்றி அவர் கூறும்போது, ‘நான் மன்னிப்புகள் கேட்பவன் அல்லன். ஆனால் நான் தொடர்ச்சியாக எத்தனை மேட்சுகள் ஆடினேன் என்பதையும் பார்க்கவேண்டும். ஒரு பேட்ஸ்மேனுக்கு இது முக்கியம். இது மன்னிப்பு அல்ல. தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலோ, தொடர்களிலோ ஆட வாய்ப்பு கிடைத்ததில்லை’ என்றார்.
31 வயதில் ஒருநாள் அணிக்குத் தேர்வானது பற்றிய விமரிசனங்களுக்குப் பதில் அளித்த விஜய், ‘என்னுடைய உடற்தகுதி சரியாக இல்லாமல், இளைஞர்கள் போல நான் துடிப்புடன் இல்லாமல் இருந்தால் என் மீது விமரிசனம் செய்பவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளமுடியும். 30 வயதாகிவிட்டால் தேர்வுசெய்யக்கூடாது என்றால் மைக்கேல் ஹஸ்ஸி, 39 வயதுவரை விளையாடியிருக்கக் கூடாது. ஐபிஎல் பிளேஆஃப்பில் சிஎஸ்கேவுக்காக ஒரு மேட்ச்சை ஜெயித்துத் தந்தார். இதுபோன்ற உதாரணங்களால்தான் நான் உத்வேகம் கொள்கிறேன். எல்லோருக்கும் வயதாகத்தான் போகிறது. எந்தளவுக்கு நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறீர்கள், எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


