நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த்!

அரைப் புள்ளி மட்டும் பெற்றுள்ள கார்ல்சன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:48 am

சநகன்

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்.

கார்ல்சன் இந்தப் போட்டியில் மிக மோசமாக விளையாடி வருகிறார். நான்காவது சுற்றுக்கு முன்பு அவர் 0.5 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் அவர் ஆனந்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

ஆனால், ஆனந்த் மிகவும் அபாரமாக ஆடி பலவீனமான நிலையில் உள்ள கார்ல்சனை வீழ்த்தினார். 47வது நகர்த்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் கார்ல்சன். நான்காவது சுற்றின் முடிவில் 2.5 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஆனந்த்.

3.5 புள்ளிகள் பெற்றுள்ள டொபலோவ் முதல் இடத்தில் உள்ளார். நாகமுரா (3), அனிஷ் கிரி (2.5) ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளார்கள். அரைப் புள்ளி மட்டும் பெற்றுள்ள கார்ல்சன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.