ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

3-ம் நாளில் இந்தியா 462/6; முரளி விஜய் 150 ரன்கள்.

ஷிகர் தவன் இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 173 ரன்களில் ஆட்டமிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

சநகன்

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஃபதுல்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்தது. 2-ம் நாள் முழுவதும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்று, ஷிகர் தவன் இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 173 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய முரளி விஜய், 201 பந்துகளில் தன் சதத்தைப் பூர்த்தி செய்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா 6 ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கேப்டன் விராட் கோலி, எதிர்பாராதவிதமாக 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 93 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 144, ரஹானே 55 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மழையால் போட்டியை உடனே தொடரமுடியாமல் போனது. ஆட்டம் தொடங்கியபிறகு, முரளி விஜய் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சஹாவும் 6 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக 98 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார் ரஹானே. மீண்டும் மழை குறுக்கிட்டதால் தொடர்ந்து ஆடமுடியாமல் போனது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்பஜன் சிங் 7, அஸ்வின் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.