ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோலி கேப்டன் ஆவதை என்.சீனிவாசன் தடுத்தார்: தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் அதிரடி தகவல்!

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

சநகன்

தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விராட் கோலியை கேப்டனாக்க 2012-லேயே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசனால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது என தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் அதிரடி தகவல் அளித்துள்ளார்.

2011-12ல் இந்தியத் தேர்வுக்குழுவின் உறுப்பினராக இருந்தவர், ராஜா வெங்கட்.  இந்திய அணி 2011-12ல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுபயணம் செய்தது. அப்போது இந்திய கிரிக்கெட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘கோலியை கேப்டனாக்குவது குறித்து மூன்று வருடங்களுக்கு முன்பே நாங்கள் (தேர்வுக்குழு) யோசித்தோம். அதற்கான முயற்சியையும் எடுத்தோம். ஆனால், அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த என். சீனிவாசனால் எங்கள் முயற்சி பலனளிக்காமல் போனது.

2011-12 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது, முதல் மூன்று டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்றுப் போயிருந்தது. கடைசி டெஸ்டுக்கு முன்பு இந்தியத் தேர்வுக்குழுவைச் சேர்ந்த மொஹிந்தர் அமர்நாத்தும் நரேந்திர ஹிர்வானியும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள். இந்திய அணி வீரர்களிடம் குழு மனப்பான்மை இல்லாமல் இருந்தது. அணிக்குள் நிலவிய உட்பிளவுகள் குறித்து அவர்கள் அறிக்கை அளித்தார்கள்.

ஒருநாள் தொடருக்கு முன்பு இந்திய அணிக்கு புது கேப்டன் தேவை என்பதை உணர்ந்தோம். அணியில் நிலவிய கருத்துவேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்றப்பட்டவர் யார் என்று பார்த்தோம். இந்திய அணியில் மீண்டும் குழு மனப்பான்மையை உண்டாக்க விராட் கோலியால்தான் முடியும் என முடிவு செய்தோம். 2010-11 தியோதர் கோப்பையை வென்ற வடக்கு மண்டலத்தின் கேப்டனாகப் பணியாற்றிய கோலியின் தலைமைப் பண்பு எங்களை ஈர்த்தது.  அப்போதுதான் அவரால் நல்ல கேப்டனாக பணியாற்றமுடியும் என்பதை உணர்ந்தோம். 2008 U19 உலகக்கோப்பையின்போது கேப்டனாக கோலி இருந்ததும் எங்கள் கவனத்தை ஈர்த்தது.

வெளிநாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கமுடியாது. இந்திய அணியின் கேப்டனை மாற்ற என்.சீனிவாசன் ஒப்புக்கொள்ளவில்லை’ என்று எழுதியுள்ளார்.

தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினரின் இந்தப் புகார் குறித்து என்.சீனிவாசனின் பதிலை அறிய செய்தி நிறுவனம் ஒன்று முயற்சி செய்தது. ஆனால் பதிலளிக்க சீனிவாசன் மறுத்துவிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.