ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

27 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்!

தன்னால் முன்புபோல கிரிக்கெட்டில் கவனம் செலுத்தமுடியாது என தன் ஓய்வுக்கான காரணத்தை கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

சநகன்

இங்கிலாந்து அணி வீரர் 27 வயது கீஸ்வெட்டர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஆடியபோது பவுன்சரால் அவருடைய முகம் பெயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் தன்னால் பழையபடி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தமுடியவில்லை என தன் ஓய்வுக்கான காரணத்தை கீஸ்வெட்டர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான கீஸ்வெட்டர் சென்ற வருடம் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியபோது பவுன்சர் பந்தால் படுகாயமடைந்தார். சோமர்செட் அணிக்காக விளையாடிய கீஸ்வெட்டர், நார்த்தாம்டன் ஷயர் அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் 14 ரன்கள் எடுத்திருந்த போது டி.ஜே.வில்லே வீசிய பவுன்சர் பந்தால் காயமடைந்தார். பந்து எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பி கீஸ்வெட்டரின் ஹெல்மெட்டுக்குள் புகுந்து வலது கண்ணுக்குக் கீழேயும் மூக்கையும் பதம் பார்த்தது. அடுத்த நொடி, அப்படியே கீழே விழுந்தார். இதனால் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்தப் பாதிப்பால் சிலகாலம் கிரிக்கெட் ஆடாமல் இருந்த கீஸ்வெட்டர் சமீபத்தில் இரண்டு கவுண்டி மேட்சுகளில் ஆடினார். ஆனால் முன்புபோல தன்னால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தமுடயவில்லை என்று கூறி ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் கீஸ்வெட்டார்.

Story image

இவர் இங்கிலாந்து அணிக்காக 46 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2010 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.