இன்று தோனியின் பிறந்தநாள்: சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் உணர்வுபூர்வமாக வாழ்த்து!
ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று ட்விட்டர் வழியாக சச்சின் வாழ்த்து கூறியுள்ளார்.


இன்று, இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனியின் 34-வது பிறந்தநாள்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வான முதல் நபர், தோனி. தன்னுடைய 5-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்து முதலில் கவனத்தை ஈர்த்தார். இந்திய அணிக்கு ஆட ஆரம்பித்த 3-வது வருடம் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் தலைமையில் 2007ல் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. 2008ல் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வென்றதன் மூலம் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது. 2011-ல் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை இவர் தலைமையில் வென்றது.
தோனியின் பிறந்தநாளையொட்டி, பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களின் மூலமாக தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று ட்விட்டர் வழியாக சச்சின் வாழ்த்து கூறியுள்ளார். கூடவே 2011 உலகக்கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்ற தருணத்தில், சச்சினும் தோனியும் கட்டித் தழுவிக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வாழ்த்துகளின் தொகுப்பு:






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...