நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கேப்டன் ஆவேன் என நினைக்கவே இல்லை: ரஹானே

நான் ஒழுங்காக விளையாடினால் அதற்கேற்ற வெகுமதிகள் கிடைக்கும் எனத் தெரியும்...

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:16 am

சநகன்

சிலவாரங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற முடியாத நிலையில் இருந்தார் ரஹானே. இப்போது மிகப்பெரிய திருப்பமாக இந்திய அணியின் கேப்டன் ஆகியுள்ளார்.

அவர் பிசிசிஐ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னை கேப்டனாக்கியது குறித்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் நான் ஒருபோதும் அதைப் பற்றி எண்ணியது கிடையாது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. என் பெற்றோரிடம் ஆசி வாங்கினேன். கேப்டன் ஆவேன் என ஒருநாளும் எண்ணியது கிடையாது. தேர்வுக்குழு என்னைத் தகுதிக்குரியவனாக எண்ணியதற்கு நன்றி. அணியின் கேப்டன் ஆனது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது என்றார்.

ஒருநாள் அணியில் இடம்பெறுவதில் உள்ள சிக்கல்களைக் கேட்டபோது, கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. என் கவனம் எல்லாம் என் ஆட்டத்தில் மட்டும்தான் இருக்கும். நான் ஒழுங்காக விளையாடினால் அதற்கேற்ற வெகுமதிகள் கிடைக்கும் எனத் தெரியும். இதன் செயல்முறைதான் முக்கியம். முடிவுகள் அல்ல. டி20 மற்றும் டெஸ்டுகளில் தொடர்ந்து ஆடுவதுபோல ஒருநாள் போட்டிகளிலும் அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன். ஏற்றமும் இறக்கமும் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் சகஜம். இந்த நேரத்தில் நேர்மறை எண்ணத்துடன் இருப்பதுதான் முக்கியம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.