நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பின்தங்கினார் பிராட்! 2015-ல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர், அஸ்வின்!

இன்று தென் ஆப்பிரிக்காவின் அத்தனை விக்கெட்டுகளும் பிராட் பந்துவீச்சில் வீழ்ந்தாலும் அவரால் 6 விக்கெட்டுகளை மட்டுமே பெறமுடியும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:56 am

சநகன்

டர்பனில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை மற்றவர்களை விடவும் அஸ்வின் அதிகம் கவனித்துக்கொண்டிருப்பார்.

இந்த டெஸ்ட் தொடங்கும்முன்பு 2015-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக அஸ்வின் முதலிடத்தில் இருந்தார். 9 டெஸ்டுகளில் 62 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். 51 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்தின் பிராட், 2-ம் இடத்தில் இருந்தார் (13 டெஸ்டுகள்)

டர்பன் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் எடுத்தால் பிராட் முதலிடம் பெற்றுவிடுவார் என்கிற நிலை இருந்தது.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் பெற்றார் பிராட். இதனால் அடுத்த இன்னிங்ஸில் அவருக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆட்டம் இங்கிலாந்து வசம் உள்ளதால் இது சாத்தியமாகலாம் என்கிற நிலைமை. இந்நிலையில் நேற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அஸ்வினுக்குச் சாதகமாக நேற்று பிராட் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. இன்று தென் ஆப்பிரிக்காவின் அத்தனை விக்கெட்டுகளும் பிராட் பந்துவீச்சில் வீழ்ந்தாலும் அவரால் 6 விக்கெட்டுகளை மட்டுமே பெறமுடியும்.

இதனால் 2015-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அஸ்வின். 2004-ல் அனில் கும்பிளே, 74 விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பெற்றார். அதன்பிறகு இந்தப் பெருமை அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.