1998-ஆம் ஆண்டு வரையில் கெங்கையம்மன் சிரசு விழாவுக்கு வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்களை ஒழுங்குப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். அப்போது, டிஎஸ்பியாக இருந்த ராமசந்திரமூர்த்தி என்பவர் குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் ஆர்.திலகவதி ராஜேந்திரனிடம் , விழாவுக்கு மாவட்ட அளவில் பொதுவிடுமுறையை தமிழ்நாடு அரசு அளித்தால், கூடுதலாக காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைக்கும். அரசு உதவிகளும் கிடைக்கும் என்றார்.
இதன்படி, 1998-இல் திலகவதி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த சீவூர் எஸ்.துரைசாமியும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். அப்போது எம்எல்ஏவாக இருந்த வி.ஜி.தனபாலோடு, கே.எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிலரும் சென்று அப்போதைய அமைச்சர் துரைமுருகனையும், பொதுத்துறையில் இருந்த ஐ.ஏ.எஸ். அலுவலர் காசி விசுவநாதனையும் சந்தித்து, இதுதொடர்பாக வலியுறுத்தினர்.
மதுரையில் அழகர் திருவிழா, திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா போன்ற விழாக்களுக்கு பொதுவிடுமுறை வழங்குவதைப் போல் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு பெருவிழாவுக்கும் விடுமுறை விடவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இவர்களுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கவும் அனுமதி கிடைத்து, சந்திப்புக்குப் பின்னர் அடுத்த சில நாள்களிலேயே வேலூர் மாவட்ட அளவில் பொதுவிடுமுறை அறிவிப்பு வெளியானது. அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

குடியாத்தம் திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.10.99 லட்சம்!

வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



