ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் என பலவாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன புனர்பு தோஷம்? இந்த தோஷம் அப்படி என்னதான் செய்யும் இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
சந்திரனும், சனியும் ஒரே ராசியில் இருந்தால் இது ஒரு வலுவான புனர்பு தோஷம் என்று சொல்லப்படுகிறது.
சந்திரன், சனி சம சப்தமாக அதாவது ஒருவரை ஒருவர் 7ஆம் பார்வையால் பார்த்துக்கொள்வது, இது ஒரு வலுவான புனர்பு தோஷம் ஆகும். சந்திரன், சனியின் நட்சத்திரங்களான, பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவற்றில் நிற்பது. சனி, சந்திரனின் நட்சத்திரங்களான, ரோகிணி, அஸ்தம், திருவோணம் இவற்றில் நிற்பது.
சனியின் பார்வையில் (3,7,10)இல் சந்திரன் இருப்பது.
சந்திரனின் பார்வையில் (7) இல் சனி இருப்பது. ( சம சப்தம பார்வை)
சனியின் வீட்டில் சந்திரனும், சந்திரனின் வீட்டில் சனியும் பரிவர்த்தனையாக இருப்பது.
சந்திரனுடன், சனி பாகை முறையில் (3 பாகைக்குள் ) இணைவது.
சனி, சந்திரன் இந்த இரு கிரகங்களும் நிற்கும் நட்சத்திர அதிபதி ஒருவரே ஆகி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது ஆகும்.
புனர்ப்பு தோஷம், எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?
இது ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் ஏற்படும் அமைப்பாகும். இது திருமணத் தடையை ஏற்படுத்தும் தோஷம் ஆகும்.
இந்த தோஷம் உள்ளவர்களைப் பார்த்த வரன்களுக்குத் திருமணத்தை ஏற்படுத்தும், ஆனால் ஜாதகருக்கு திருமணம் கைகூடாது.
இது திருமண நாளன்று தாலி ஏறும் போது கூட தடையைத் தரும். இந்த தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் ஒருமுறைக்கு, இரண்டு - மூன்று முறை (முடிந்த அளவு ) செய்தால், தோஷ நிவர்த்தி ஏற்பட்டு தடை விலகும். இதனை அனுபவப் பூர்வமாக உணரலாம்.
பரிகாரம் என்னென்ன?
குல தெய்வ கோயிலில் அல்லது ஏதேனும் ஒரு அம்மன் கோயிலில், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் திங்கள்கிழமைகளில் அல்லது ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் சனிக்கிழமைகளில் குறைந்தது 8 பேருக்கு தயிர்ச் சாதம் தானமாகத் தருதல் அவசியம். இதனை தாம் சாப்பிடுவதோ அல்லது வீட்டுக்கோ கொண்டு வரக்கூடாது. இந்த பரிகாரத்தை இரண்டு மூன்று முறைக்குக் குறையாமல் செய்துவந்தால், புனர்ப்பு தோஷம் நீங்கி திருமணத் தடை நீங்கும். திருமணம் கைகூடும் என்பது நிச்சயம்.
தொடர்புக்கு: 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


